புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
இளையான்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளையான்குடி,
சிவகங்கை போதை பொருள் தடுப்பு போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.அப்ேபாது இளையான்குடி அருகே உள்ள சாத்தணி கிராமத்தில் ரோந்து வந்த போது அங்கு குமார்(வயது 45) என்பவரின் பெட்டிக்கடையில் சோதனையிட்டனர். அதில் தடை விதிக்கப்பட்ட குட்கை, புகையிலை பொருட்கள் 36 பாக்கெட்டுகள், 9 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக குமார் கைது செய்யப்பட்டார்.
இதேபோல இளையான்குடி புறவழிச்சாலையில் சிவானந்தம் (42) என்பவரது பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 30 பாக்கெட்டுகள் கைப்பற்றி அவரை கைது செய்தனர். இருவர் மீதும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.