சாராயம்- கஞ்சா விற்ற 2 பேர் கைது
பேரளம் அருகே சாராயம்- கஞ்சா விற்ற 2 பேர் கைது
நன்னிலம்:
பேரளம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருதவாஞ்சேரி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மானந்தகுடி பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது21) என்றும் அவர் விற்பனைக்கு 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதைப்போல கொத்தவாசல் பஸ் நிறுத்தம் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொத்தவாசல் பகுதியை சேர்ந்த ஜெயராஜ்(32) என்றும் அவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ெஜயராஜை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.