கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் ஏரிக்கரை பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த சேஷசமுத்திரம் கிராமத்தை சோ்ந்த தனபால்(வயது 55), அய்யாசாமி மகன் கோவிந்தராஜ்(21), ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 4 பேரை பிடித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனபால், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.