நொய்யல்,
கரூர் மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில், வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (34) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.இதேபோல் அண்ணாநகரை சேர்ந்த மகாமுனி (43) என்பவர் தனது பெட்டிக்கடையில் வைத்து மது விற்றதாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.