தோகைமலை,
தோகைமலை அருகே கல்லடை, ஆலத்தூர் பகுதியில் தோகைமலை சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈட்டனர். அப்போது ஆலத்தூர் அண்ணா நகரை சேர்ந்த குழந்தைவேல் (வயது 60), கல்லடை அண்ணாநகரை சேர்ந்த ராமலிங்கம் (47) ஆகிய 2 பேரும் தங்களது பெட்டிக்கடைகளில் மது விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, விற்பனைக்காக வைத்திந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.