செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது; ஒரு கிலோ பறிமுதல்

செங்கல்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-07-16 09:08 GMT

செங்கல்பட்டு அடுத்த வளர்குன்றம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடை அருகே சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வினோத் (20) மற்றும் பிரதீஷ் குமார் (22) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்