கோவையில் குடோனில் பதுக்கி கஞ்சா விற்ற 2 பேர் கைது-கொலை வழக்கில் ெஜயிலுக்கு சென்று வந்தவர்கள்
கோவையில் குடோனில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
கோவையில் குடோனில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொலை வழக்கில் ஜெயிலுக்கு சென்று வந்தவர்கள் ஆவர்.
குடோனில் கஞ்சா பதுக்கல்
கோவை நகரில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கும் கஞ்சா சப்ளை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் கோவை குட்ஷெட் ரோட்டில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த பெரியார் நகர் புலியகுளத்தை சேர்ந்த முத்தாலப்பன் (வயது 33), செல்வபுரம் கல்லா மேட்டை சேர்ந்த ராஜா (41) ஆகிய 2 பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் செல்வபுரம் எல்.ஐசி காலனி பகுதியில் உள்ள ஒரு குடோனில் போலீசார் சோதனை நடத்தினர் அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 35 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கொலை வழக்கு கைதிகள்
முத்தாலப்பன் மீது ஆந்திராவில் கொலை வழக்கு உள்ளது. ராஜாவுக்கு கோவையில் கொலை வழக்கு உள்ளது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு பேருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜாமீனில் வெளியே வந்த இவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து கிலோ 8 ஆயிரம் ரூபாய்க்கு கஞ்சாவை விலைக்கு வாங்கி அதனை கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர்.
இவரிடம் கஞ்சா வாங்கியவர்கள் அதனை பொட்டலமாக போட்டு கல்லூரி மாணவர்கள் உட்பட பலருக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களில் 300 கிலோ கஞ்சா விற்றது தெரியவந்தது. இந்த கஞ்சா கடத்தல் கும்பலுக்கு குண்டு ராஜன் என்பவர் தலைவராக செயல்பட்டுள்ளார். குண்டு ராஜனை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.