கஞ்சா விற்ற 2 பேர் கைது

நெல்லை அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-08 19:53 GMT

நெல்லை அருகே தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பர்கிட்மாநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கே.டி.சி. நகரை சேர்ந்த பிரீகன் (வயது 35), நடுவக்குறிச்சியை சேர்ந்த சண்முகவேல் (31) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்