கோவை
கோவை பெரியகடை வீதி போலீசார் உக்கடம் ஜி.எம் நகர் நீர்பண்ணை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில், நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோட்டைப்புதூர் என்.எஸ். கார்டனை சேர்ந்த கூலி தொழிலாளி அபுதாஹீர் (வயது 51) மற்றும் தெலுங்குபாளையம் ராஜேஷ்வரி நகரை சேர்ந்த ரவி (58) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா, செல்போன் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.