கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-02 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி தாவரவியல் பூங்காவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரை சோதனை செய்தபோது, அவரிடம் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் தோடர் மந்து பகுதியை சேர்ந்த நோட்டஸ் குட்டன் (வயது 25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் மேல் கூடலூர் அருகில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த சர்புதீன் (25) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்