கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது

Update: 2023-02-24 18:45 GMT

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த மத்தம்பாளையம் கோட்டை பிரிவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள்.

அப்போது அங்கு 2 ஆசாமிகள் கஞ்சா மற்றும் போதைப்பொருள்களை விற்பனை செய்து கொண்டு இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரிஸ்வான் நிவாஸ்( வயது24), ஐரிஸ் ராபின் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடம் இருந்து அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்