கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருப்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் தாலுகா பகுதிகளில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து சென்றனர். அப்போது பொம்மிகுப்பம் கிராமத் தில் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசா ரித்தனர். விசாரணையில் அவர்கள் அண்ணா நகரைச் சேர்ந்த வேலு (வயது 42), சீனிவாசன் (35) என்பதும், கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்க முயன்றதும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு இரு வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.