கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஆம்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-29 17:58 GMT

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே பாங்கிஷாப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் வெங்டசமுத்திரம் பகுதியை சேர்ந்த சாலமன் (வயது 19), சுந்தர் வயது (26) என்பதும், இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து உமராபாத் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்