திண்டிவனத்தில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

திண்டிவனத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-28 16:16 GMT

திண்டிவனம், 

திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி தலைமையிலான போலீசார் திண்டிவனம் நகர பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தொப்பை கவுண்டர் தெருவில் 150 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த குமாரி (வயது 70), செல்வகுமார் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்