திசையன்விளை:
உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் நேற்று நவ்வலடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த தத்துவநேரி தெற்கு தெருவை சேர்ந்த வினோத்குமார் (வயது 23), திசையன்விளை கக்கன் தெருவை சேர்ந்த அருண்குமார் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.