கஞ்சா விற்ற 2 பேர் கைது

ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-26 21:30 GMT

ஏர்வாடி:

ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் சேசையாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஏர்வாடி உப்பு நடுத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் சதான் உசேன் (வயது 22), 6-ம் தெருவை சேர்ந்த முகைதீன் மாலிக் மகன் முகம்மது அலி உசேன் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்