கஞ்சா விற்ற 2 பேர் கைது

வீரபாண்டியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-06 18:45 GMT

வீரபாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோகுல கண்ணன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எஸ்.பி.எஸ். காலனி அருகே 3 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடிக்க முயன்றனர். அப்போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற 2 பேரையும் பிடித்து மோட்டார் சைக்கிளில் சோதனை செய்தனர். அதில் 320 கிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் வீரபாண்டியைச் சேர்ந்த சுபாஷ் குமார் (வயது 21), சின்னமனூரை சேர்ந்த முனீஸ்வரன் (19), வயல்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷ் குமார், முனீஸ்வரனை கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்