பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது

பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-18 18:51 GMT

கரூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், கரூர் டவுன் போலீசார் அந்த ஓட்டலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலில் உள்ள ஒரு அறையில் 38 மற்றும் 34 வயதுடைய 2 பெண்களை வைத்து சிலர் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக கோவை அறிவொளி நகரை சேர்ந்த ராஜீவ் (வயது 28), புலியூர் அன்பு நகரை சேர்ந்த வேலுச்சாமி (56) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய அரவிந்த் (27) என்பவரை தேடி வருகின்றனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்