கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது; 5½ கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அனுமந்தபுரம் சாலையில் மறைமலைநகர் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியான மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் வழிமறித்து விசாரித்தபோது இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் இருவரும் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் (வயது 23), அஜய் எபிநேசர் (23) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 5½ கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.