அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-13 20:24 GMT

தாயில்பட்டி, 

அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறதா என வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சங்கரபாண்டியபுரம் பட்டாசு ஆலையில் அலுவலக அறையில் பாதுகாப்பு இன்றி சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த புல்லக்கவுண்டன்பட்டி மேல தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 40), குமார் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து தலா 30 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப்பொருட்களை பறிமுதல் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்