அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-12 19:24 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் பாலமுருகன் (வயது 23), முத்துமாரி (39) ஆகியோர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதியில் பட்டாசுகள் தயாரித்து தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரிடம் இருந்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து பாலமுருகன், முத்துமாரி ஆகியோரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்