அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 2 பேர் கைது

அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-01 19:05 GMT

தாயில்பட்டி, 

சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி உத்தரவின் பேரில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு திரி தயாரிக்கப்படுகிறதா என வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றி முருகன், ராமமூர்த்தி, உதயகுமார், ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது தாயில்பட்டி, விஜயரங்கபுரம், ராமலிங்கபுரம், துரைச்சாமிபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினனர். அப்போது ராமலிங்கபுரத்தில் பட்டாசு திரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ராஜன் (வயது 56) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 30 குரோஸ் வெள்ளைத்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல துரைசாமிபுரத்தில் பட்டாசு திரிதயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த மல்லையன் (60) என்பவரிடம் இருந்து 40 குரோஸ் வெள்ளை திரி பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்