வாலிபரை கொன்று கண்மாயில் வீசிய 2 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாலிபரை கொன்று கண்மாயில் வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-19 19:49 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாலிபரை கொன்று கண்மாயில் வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கண்மாயில் பிணம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாலங்குளம் கண்மாயில் 18 வயது வாலிபர் பிணமாக கிடப்பதாக மம்சாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மம்சாபுரம் போலீசார் கண்மாயில் பிணமாக கிடந்தவரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் சேதுராஜ் (வயது 18) என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வாலிபர் கொலை

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மம்சாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (29), வீரமணி (23) ஆகிய 2 பேரும் சேர்ந்து சேதுராஜை கொலை செய்து கண்மாயில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்