வாலிபரிடம் கத்திமுனையில் பணம் பறித்த 2 பேர் கைது

Update: 2023-04-26 19:30 GMT

சேலம் மேயர்நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 30). இவர், கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த 3 பேர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தோஷ்குமாரிடம் பணம் பறித்தது கதிர்வேல், செல்வராஜ் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதில் செல்வராஜ் மற்றும் சிறுவனை போலீசார் கைது செய்தனர். கதிர்வேலை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்