வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-18 19:14 GMT

கரூர் மாவட்டம், வரப்பூர் அருகே உள்ள இரும்பூதி பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 29). இவர் தண்ணீர்ப்பந்தல் பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வீராக்கியத்தை சேர்ந்த நவீன் (27), திருச்சியை சேர்ந்த பிரவீன் ராஜ் (24) ஆகியோர் முத்துக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துள்ளனர். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து, நவீன், பிரவீன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்