வைப்பாற்றில் மணல் அள்ளிய 2 பேர் கைது
விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே அரண்மனை காடு பகுதியில் உள்ள வைப்பாற்றில் சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் அள்ளுவதாக விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு மணல் அள்ளி கொண்டிருந்த விளாத்திகுளம் அருகே உள்ள துலுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார், ஈஸ்வரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அள்ளப்பட்ட மணலுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.