வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

மணல்மேடு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்படனர்

Update: 2023-01-14 18:45 GMT

மணல்மேடு:

மணல்மேட்டை அடுத்த கடலங்குடி தோப்புத்தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் பிரவின்ராஜ் (வயது24).சம்பவத்தன்று தனது சித்தி மகன் ராஜேஷ், மற்றும் அருண்குமார், கோபிநாத் ஆகியோர் கடலங்குடியில் உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர். அப்போது கடலங்குடி ஓடக்கரை வடக்குத் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் மணிகண்டன் (24), ரமேஷ் மகன் ராகுல் (21) ஆகியோர் அந்த கடைக்கு வந்தனர். இதில் மணிகண்டன் மீது ராஜேஷ் இடித்துள்ளார். இதனால் மணிகண்டனுக்கும், ராஜேசுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த பிரவின்ராஜ் சமாதானம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், ராகுல் ஆகியோர் பிரவின்ராஜை அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ராகுல் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்