பள்ளியில் புகுந்து மாணவனை தாக்கிய 2 பேர் கைது

கோவில்பட்டி அருகே பள்ளியில் புகுந்து மாணவனை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-17 18:45 GMT

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் வகுப்பறையில் ஒரு மாணவனுக்கும், மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பானது. பள்ளி தலைமை ஆசிரியர், 2 பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

கடந்த 15-ந் தேதி மாணவியின் தாயார் மற்றும் உறவினர் பள்ளிக்கு வந்து, அந்த மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மாணவன் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தாயார் மற்றும் உறவினரை கைது செய்தனர்.

இதற்கிடையே காயம் அடைந்த மாணவனின் உறவினர்கள் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்