ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
பாளையங்கோட்டை அருகே ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி என்ற கண்ணன் (வயது 26). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளார். சம்பவத்தன்று ரத்தினசாமி வீட்டின் முன்பு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இரவு வெள்ளூரை சேர்ந்த பாலமுருகன் (26) என்பவர், ஆட்டோவின் கண்ணாடியை அரிவாளால் தாக்கி உடைத்தார். இதனை ரத்தினசாமி கண்டித்துள்ளார். அப்போது பாலமுருகனும், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற போஸ் (25) ஆகியோரும் சேர்ந்து ரத்தினசாமியை மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன், இசக்கிமுத்து என்ற போஸ் ஆகியோரை கைது செய்தனர்.