ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

ஆட்டோ கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-05 15:47 GMT

குளித்தலை சண்முகா நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 39). இவர் பன்றி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் இவர் தனக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவை அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் அருகே பொது இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை் சேர்ந்த சக்திவேல் (21), ராம்குமார் (20) ஆகிய 2 பேரும், ஆட்டோவின் கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கி உள்ளனர். பின்னர் இதுகுறித்து கேட்ட பொன்னையாவிற்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பொன்னையா ெகாடுத்த புகாரின்பேரில், சக்திவேல், ராம்குமார் ஆகிய 2 பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்