ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-28 18:54 GMT

அரவக்குறிச்சி சேவியர் தெருவை சேர்ந்தவர் காட்வின் பாபு (வயது 33). இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று காட்வின்பாபுவிற்கும், மற்றொரு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் நஞ்சைகாளிகுறிச்சியை சேர்ந்த முனியப்பன் (32) மற்றும் அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காதர் உசேன் (42), திவாகர் (20) ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காட்வின்பாபுவின் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக காட்வின்பாபு கொடுத்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீசார் முனியப்பன், காதர் உசேன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்