தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது

தொழிலாளர்களை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-05 19:00 GMT

ரிஷிவந்தியம், 

உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் மகன் மணிகண்டன் (வயது 20). அதே ஊரைச்சேர்ந்தவர்கள் இவரது நண்பர்களான ஏழுமலை, சின்னகுட்டி, அருண்குமார். தொழிலாளர்களான இவர்கள் 4 பேரும் ரிஷிவந்தியத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுவாங்க சென்றனர். அப்போது அங்கு வந்த ரிஷிவந்தியத்தை சேர்ந்த பட்டாணி என்கிற தேவேந்திரன் (23), பாலா என்கிற பாலமுருகன் (32) ஆகியோர் குடிபோதையில் மணிகண்டனிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தையால் திட்டி பீர்பாட்டிலால் தலையில் தாக்கியதாக தெரிகிறது. அதை தடுக்க சென்ற மணிகண்டனின் நண்பரான ஏழுமலையையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவேந்திரன், பாலமுருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்