பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேர் கைது

மயிலாடுதுறையில் பெண்ணை உருட்டு கட்டையால் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2023-04-04 18:45 GMT

மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயத்தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி கவிதா (வயது 45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜான் மகன் பிரகாஷ் என்பவருக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கவிதா தான் வளர்க்கும் மாட்டை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது பிரகாஷ் வீட்டை கடந்த போது வீட்டிலிருந்து வந்த பிரகாஷ் மற்றும் அவரது உறவினர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேர்ந்து கவிதாவை உருட்டுக் கட்டையால் தாக்கியும், திருப்புளியால் குத்தி காயப்படுத்தி உள்ளனர். இதில் தலை, கைகள் என உடல் முழுவதும் பலத்த காயமடைந்த கவிதா சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கவிதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரகாஷ் (23), மணிகண்டன் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்