போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேர் கைது

காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் அருகே போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-04 13:58 IST

காஞ்சீபுரம் பூக்கடைசத்திரம் அருகே இரவு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு சேகர் மீது ஆட்டோ மோதுவது போல் சென்ற 2 வாலிபர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதனை தொடர்ந்து ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து மீண்டும் போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு சேகரை ஆட்டோ டிரைவர்கள் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி விட்டு தப்பிச்சென்றனர். இதனை தொடர்ந்து காயம் அடைந்த போலீஸ் ஏட்டு சேகரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் ஏட்டு சேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீசார் கஞ்சா போதையில் இருந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் முகமதுசாதிக் (வயது24) மற்றும் தீபக் (28) ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்