வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-26 00:37 GMT


மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கண்ணபிரான் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர்கள் முகமது இஷாத், முகமது ரியாஸ். இவர்கள் இருவரும் கண்ணபிரான் வீட்டிற்கு அருகில் நின்று ஏதோ பேசியதாக கூறப்படுகிறது. இதை அவர் தட்டி கேட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த இருவரும் கண்ணபிரானை ஆபாசமாக பேசி தாக்கினர். இந்த சம்பவம் குறித்து அவர் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது இஷாத், முகமது ரியாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்