பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது

பஸ் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-25 20:00 GMT

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளத்தை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 26). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று நெல்லை அருகே தாழையூத்து பஸ்நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (34), வண்ணான்பச்சேரியை சேர்ந்த பாலன் (29) ஆகியோர் தங்கதுரையிடம் தகராறு செய்து அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்து, பாலன் ஆகியோரை கைது செய்தனா்.

Tags:    

மேலும் செய்திகள்