வாலிபரை தாக்கியதாக 2 பேர் கைது

வாலிபரை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-28 19:55 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன்(வயது 32). விவசாயியான இவர் கடந்த 23-ந் தேதி பெரியவடகரை கிராமத்திற்கு சொந்த வேலையாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பெரியவடகரையில் அப்பகுதியை சேர்ந்த முருகானந்தம், வெண்பாவூரை சேர்ந்த சரவணன், வேல்முருகன் ஆகியோர் சாலையில் நின்று வழிவிடவில்லை என்று கூறி, முத்துச்செல்வனுக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் முத்துச்செல்வனை 3 பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த முத்துச்செல்வன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், முருகானந்தம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரவணனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்