2 பேர் கைது; கார் பறிமுதல்

Update: 2023-03-12 19:47 GMT

ஆத்தூர்:-

போலி நகைகள் அடகு வைத்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

போலி நகைகள் அடகு

சேலம் மாவட்டம் ஆத்தூர் காமராஜனார் ரோட்டில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியில் போலி நகைகள் அடகு வைத்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக வங்கி மேலாளர் லட்சுமிபதி ஆத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த துரைசாமி மகன் துரைராஜ் (வயது 33), கள்ளக்குறிச்சி மாவட்டம் உளூந்தூர்பேட்டை தாலுகாவை சேர்ந்த நாராயணசாமி (52) ஆகிய 2 பேரும் 8 வளையல்களை அடகு வைத்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் பெற்றதாகவும், அவை போலி நகைகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

2 பேர் கைது

இதற்கிடையே ஆத்தூர் மஞ்சு நீரோடு ெரயில்வே கேட் அருகில் காரில் வந்த துரைராஜ், நாராயணசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலி நகைகள் அடகு விவகாரத்தில் பா.ஜனதா பிரமுகர் உள்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்