காரிமங்கலம் அருகே சொகுசு காரில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது

Update: 2023-06-16 18:45 GMT

காரிமங்கலம்

காரிமங்கலம் அருகே பெரியாம்பட்டியில் சொகுசு கார் ஒன்று முன்பக்க டயர் வெடித்து நடுவழியில் நின்றது. அந்த வழியாக வந்த போலீசார், காரை சோதனையிட்ட போது அதில் 3 சாக்குகளில் இருந்த 30 கிலோ கஞ்சா சிக்கியது. கஞ்சா கடத்தி வந்ததாக கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபில் (வயது 24), அதே பகுதியை சேர்ந்த ஜம்ஷித் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்