முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

முன்னாள் ராணுவ வீரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-16 21:24 GMT

பணகுடி அருகே மருதப்பபுரத்தைச் சேர்ந்தவர் திரவியம் மகன் ரமேஷ் (வயது 47). முன்னாள் ராணுவ வீரர். இவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் மேலாளராக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வேலையை முடித்துவிட்டு ஊருடையார்புரம் வழியாக வீட்டுக்கு சென்றபோது மர்மநபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதுகுறித்து நெல்லை தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நெல்லை டவுன் பகுதியை சேர்ந்த வேலையா மகன் சங்கர் என்ற சங்கரபாலன் (36), குருநாதன் மகன் வீரபாண்டி (29) உள்ளிட்டவர்கள் சொத்து பிரச்சினை காரணமாக ரமேஷை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து தச்சநல்லூர் தாராபுரம் பகுதியில் வைத்து சங்கர் என்ற சங்கரபாலன், வீரபாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்