பள்ளிபாளையம்:
திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). வெப்படையில் உள்ள நூல் மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நெட்ட வேளாண் பாளையம் அருகே தண்ணீர் பந்தல்பாளையத்தை சேர்ந்த வினோத் (29), வெப்படையை சேர்ந்த சசிகுமார் (30) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3 ஆயிரத்து 500-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி வெப்படை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், சசிகுமாைர ஆகிய 2 பேரை கைது செய்தனர்.