விவசாயிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது

மொளசி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-29 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் அடுத்த மொளசி அருகே காட்டு வேலம்பாளையம், படுகைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது69). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டு அதனை அருகில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கடந்த 20 ஆண்டுகளாக அனுப்பி வந்துள்ளார். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் (56), சண்முகம் (35), பர்வதம் (59), சிவக்குமார் (40), சிவகாமி (60) ஆகிய 5 பேரும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு பெரியசாமி விவசாய நிலத்திற்கு சென்றனர். அப்போது பெரியசாமியை மிரட்டி அவரது நிலத்தில் ஒரு பகுதியை விலைக்கு கேட்டனர். இதற்கு அவர் விலைக்கு தர மறுத்துள்ளார். பின்னர் அவர்கள் 5 பேரும் பட்டாக்கத்தியால் பெரியசாமியை மிரட்டி நிலத்தை தரவில்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என மிரட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து பெரியசாமி மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து கடந்த இரண்டு மாதங்களாக அவர்களை தேடி வந்தார். இந்தநி

Tags:    

மேலும் செய்திகள்