குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா முனியூர் அருகே உள்ள சடையங்கால் கீழ குடியான தெருவை சேர்ந்தவர் முருகையன் மகன் செல்வகுமார் (வயது 37). புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையம் சரவணன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்குமார். (34). இவர்கள் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் குண்டர் சட்டத்தில் செல்வகுமார், ராஜேஷ்குமார் ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.