சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கூத்தூர் பெரிய தெருவை சேர்ந்த ராஜீ மகன் விமல்ராஜ் (வயது22) என்பதும், சாராய பாக்கெட்டுகளை பையில் வைத்து கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வெட்டாற்று பாலம் அருகே ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த நாகை தாமரைக்குளம் மேல் கரை பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி (42) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.