கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-07-21 00:54 IST


நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த திருட்டு வழக்கில், வடலிவிளையை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 40) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதையடுத்து அவருக்கு கோர்ட்டு பிடியாணை பிறப்பித்தது. தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், நாங்குநேரி போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இதேபோல் நடுக்கல்லூரைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (45) என்பவர் திருட்டு, அடிதடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 9 மாதங்களாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்தார். அவரை சுத்தமல்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்