2 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
2 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேவகோட்டை,
தமிழகம் முழுவதும் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தேவகோட்டை நகரில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்த முகமது இஸ்மாயில் (வயது 20), பழைய சருகணி ரோடு முகமது யூசுப் (23) ஆகியோர் அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
அவர்களை போலீசார் சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 1 கிலோ 830 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.