2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கூடலூரில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதாரத் துறையினர் பல்வேறு தெருக்களில் ஆய்வு நடத்தினர்.

Update: 2023-06-03 18:45 GMT

கூடலூர்

கூடலூரில் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் சுகாதாரத் துறையினர் பல்வேறு தெருக்களில் ஆய்வு நடத்தினர்.

2 பேருக்கு டெங்கு காய்ச்சல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அப்துல்கலாம் நகரை சேர்ந்த 2 பேர் சேலம் சென்று திரும்பினர். அவர்கள் காய்ச்சலுடன் வந்ததாக தெரிகிறது. மருத்துவரிடம் ஆலோசனை பெற்றும் சரியாகவில்லை என தெரிகிறது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் 2 பேரிடம் இருந்து மாதிரி சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் முடிவில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. இந்தநிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் அப்துல்கலாம் நகரை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள் சேலத்துக்கு சென்று விட்டு காய்ச்சலுடன் வீடு திரும்பியது தெரியவந்தது. தொடர்ந்து அப்துல்கலாம் நகர் உள்பட பல தெருக்களில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு பொது இடங்களில் பழைய கழிவுபொருட்கள் அதிகளவு குவித்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

பழைய பொருட்கள்

அதில் மழைநீர் தேங்கி இருப்பதை பார்த்தனர். தொடர்ந்து ஆய்வு செய்தபோது, பழைய பொருட்களில் தேங்கியிருந்த நீரில் லார்வா புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தண்ணீரை அகற்றி பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. தொடர்ந்து தெருக்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறியதாவது:-

சேலத்துக்கு சென்ற இடத்தில் கூடலூரை சேர்ந்த 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடு திரும்பி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசுக்கள் பரவாமல் தடுக்க குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் தொட்டிகள், பாத்திரங்களை மூடி வைத்திருக்க வேண்டும். மேலும் மழைநீர் தேங்கும் வகையில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் பழைய பொருட்களை குவித்து வைக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்