தமிழகத்துடன் இணைந்த தினம்: குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை;கலெக்டர் தகவல்

தமிழகத்துடன் இணைந்த தினமான குமரி மாவட்டத்துக்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-27 18:35 GMT

நாகர்கோவில், 

தமிழகத்துடன் இணைந்த தினமான வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விடுமுறை

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 12-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

தமிழகத்துடன் குமரி இணைந்த தினத்துக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 1-ந் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசர பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்