உடன்குடி வாரச்சந்தையில் ரூ.1.98 கோடியில் மேம்பாட்டு பணி

உடன்குடி வாரச்சந்தையில் ரூ.1.98 கோடியில் மேம்பாட்டு பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

Update: 2022-08-11 15:09 GMT

உடன்குடி:

உடன்குடி வாரச்சந்தையில் ரூ.1.98 கோடியில் மேம்பாட்டு பணிக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

வாரச்சந்தையில் அடிக்கல்

உடன்குடி வாரச்சந்தையில் பேரூராட்சி சார்பில் ரூ.1.98 கோடி சார்பில் அடிப்படை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. உடன்குடி பேரூராட்சி மன்றத் தலைவி ஹூமைரா ஆஸ்ஸாப் கல்லாசி தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ், யூனியன் தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிககல்லை நட்டி சந்தை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ள இடங்களை ஆய்வு செய்தார். இந்தவிழாவில் தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலர் உமரிசங்கர், செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், ஓன்றிய மகளிரணி அமைப்பாளர் ராஜேஸ்வரி, குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உறுதிெமாழி ஏற்பு

மேலும், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் எப்ரேம் முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) நடராஜன் வரவேற்று பேசினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் 'மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு' 'புத்தியை கெடுக்கும் போதையை ஒழிப்பீர்' 'குடி குடியை கெடுக்கும்' 'மரணத்தின் டோல்கேட் மது' உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகள் கையில் ஏந்தியவாறு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் வேலவன், துணை தலைவர் செங்குழி ரமேஷ், மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன், வருவாய் ஆய்வாளர் மணிகண்ட வேல், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிச்சம்மாள் ஆனந்த், உறுப்பினர்கள் ஆனந்த ராமச்சந்திரன், அந்தோனிரூபன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்