மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-05 19:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையிலேயே உள்ளது. நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. 13 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 183 ஆகும். இவர்களில் 67 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 534 பேர் இறந்து விட்ட நிலையில் 116 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்